சிவப்பு நிற சேலையில் ஷெரின் பேபியின் அட்டகாசமான புகைப்படங்கள்..!
ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஷெரின் தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார், அதற்கு பிறகு சில படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு சில ரசிகர்களை பெற்றுக்கொண்டார், மேலும் சில காலமாக பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஷெரினிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தது, அதில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் நன்கு பிரபலமானார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்பொழுது தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார், மேலும் தற்பொழுது கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் ஷெரின் தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களளை உற்சாகப்படுத்தி வருகிறார், அந்த வகையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.