வாட்சப் நிறுவனம் வருகின்ற 2022 ஆம் ஆண்டில் அதிரடியான அம்சங்கள் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ளது.
உலக அளவில் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டு பிரபலமான மெசேஜிங் ஆப்பாக இருந்து வருவது வாட்ஸ்அப் தான். நிச்சயம் நம் அனைவரது மொபைல்களிலும் வாட்ஸ்அப் கண்டிப்பாக இருக்கும். இந்த வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளிகளை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது பல புதிய அம்சங்களை தற்பொழுது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 2022ஆம் ஆண்டில் வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ள சில அம்சங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
லாஸ்ட் சீன்
பயனர்கள் தாங்கள் கடைசியாக வாட்ஸ் அப்பை உபயோகித்த நேரம் மற்றும் தங்களுக்கு நண்பர்கள் அனுப்பிய மெசேஜ்களை படித்த பின்பும் புளுடிக்கை மறைப்பதற்கான வாய்ப்புகளை வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்த ஆண்டு வழங்க உள்ளது. அதிலும் குறிப்பிட்ட சில நபர்களுக்கு நமது லாஸ்ட் சீனை மறைப்பதற்கான புதிய ஆப்ஷனை உருவாக்குவதில் வாட்ஸ்அப் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது இது நிச்சயம் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
ஸ்டிக்கர் மேக்கர்
ஸ்டிக்கர் மேக்கர் ஏற்கனவே வாட்ஸ் வெப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வருகிற ஆண்டு இந்த ஸ்டிக்கர் மேக்கர் வாட்ஸ்அப் மொபைலிலும் வரும் என கூறப்படுகிறது.
குரூப் அட்மின்
அடுத்ததாக குரூப் அட்மின்களுக்கு குரூப்பில் கூடுதலான சில கட்டுப்பாட்டு ஆளுமைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. குரூப்பை உருவாக்கக்கூடிய அட்மின் இது நிச்சயம் பெரிதும் உதவும்.
ஆடியோ மெஸேஜ்
தற்பொழுதும் யாராவது நமக்கு ஆடியோ மெஸேஜ் அனுப்பினால் அதை வேகமாக வைத்து கேட்கக்கூடிய ஆப்ஷன் உள்ளது. ஆனால் பார்வர்டு ஆடியோ மெசேஜ்களை வேகமாக வைத்து கேட்க முடிவதில்லை. அடுத்த ஆண்டு பார்வர்ட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் ஆடியோ மெசேஜ்களையும் வேகமாக வைத்து கேட்பதற்கான ஆப்ஷன் வரும் என கூறப்படுகிறது.
டைம் லிமிட்
இந்த வசதியை பயன்படுத்தி நாம் அனுப்பிய குறுந்தகவல்களை குறிப்பிட்ட அவகாசத்தில் நம்மால் அழிக்க முடியும். அதாவது மெசேஜ் அனுப்பிய ஏழு நாட்களுக்குப் பின் தானாகவே அழிந்து வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது ஏழு நாட்கள் மட்டும் அல்லாமல் 90 நாட்களாக அதிகரித்துக் கொள்ளும் வகையிலும் விரைவில் புது அப்டேட் வரலாம் என கூறப்படுகிறது.
மெசேஜ் ரியாக்சன்
அடுத்ததாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் நாம் மெசேஜ்களுக்கு ரியாக்சன் மட்டும் செய்து விடுவோம். ஆனால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் பார்த்துவிட்டால் ரிப்ளை செய்ய வேண்டும் அல்லது மெசேஜ் அனுப்பாமல் தான் இருக்க வேண்டும். ஆனால், இனி இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போல வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினால் ரியாக்சன் மெசேஜ் கொடுக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…