முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா மூலம் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவு..!
முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா மூலம் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) வெளியிட்ட மூன்று புதிய ஆவணங்களில் ஒன்றன் முடிவு வெளிவந்துள்ளது. இதில் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் கொரோனா நோயால் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவாகவும், தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 10 மடங்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்டா கொரோனாவிற்கு மாடர்னாவின் தடுப்பூசி சற்று அதிக அளவிலான பாதுகாப்பை வழங்கியிருப்பதாக ஒரு ஆய்வின் தரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.