சத்தமாக பாடுவது கூட கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் அறிக்கை!
சத்தமாக பாடுவது கூட கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறியுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் பல ஆய்வுக் கூடங்களில் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதுடன், பல ஆய்வுக் கூடங்களில் ஏன் பரவுகிறது என்ற ஆய்வுகளும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பாடும்பொழுது வெளிப்படக்கூடிய ஸ்ப்ரே துகள்கள் மற்றும் நீர்த்துளிகளால் சுற்றியுள்ள காற்றில் கொரோனா பரவல் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் நாங்கள் பாடும்போது உண்மையில் வெளிப்படக்கூடிய துகள்களை நாங்கள் ஆய்வு செய்தோம் இதனால் அதிக அளவில் கொரோனா பரவுகிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர் சுவீடனிலுள்ள லண்ட் எனும் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர்கள்.
மேலும் இது தொடர்பாக கூறிய பாடகர்கள், பாடுவதை பாதுகாப்பானதாக மற்ற உலக முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் எச்சில் துகள்கள் பெரிய நீர்த்துளிகளின் எண்ணிக்கை ஆகியவை எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் தானாக காற்றில் பரவி கொரோனாவை ஏற்படுத்துகிறது என ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக பாடக்கூடிய பாடல்களில் மெய் எழுத்துக்களில் இருந்து தான் அதிகப்படியான நீர் துளிகள் வெளியிடுவதாகவும், மேலும் b&p ஆகிய எழுத்துக்களாலும் மிகப்பெரிய எச்சில் துகள்கள் காற்றில் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.