திருச்சியில் தேர்வு எழுத வந்த சாய்பல்லவியுடன் சக மாணவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய்பல்லவி கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார். மேலும் நானியுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் இவர் திருச்சியில் உள்ள சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் எப்எம்ஜிஇ(FMGE-Foreign Medical Graduate Examination) தேர்வை எழுதியுள்ளார். முககவசம் அணிந்து கொண்டு தலையில் முக்காடு போட்டு கொண்ட தேர்வு எழுதிய அவரை சக மாணவர்களால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சில நேரங்கள் கழித்து தேர்வறையில் உள்ள மாணவர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர். அதனையடுத்து தேர்வு முடிந்த பின் சக மாணவர்கள் அனைவரும் சாய்பல்லவியுடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். பிரபல நடிகையாக உள்ள சாய்பல்லவி சக மாணவர்கள் செல்ஃபி எடுக்க கேட்ட போது உடனே ஒத்துக் கொண்டதுடன் தனது முககவசசத்தையும் மாற்றி எளிமையுடன் நடந்து கொண்டதாக சக மாணவர்கள் புகழ்ந்துள்ளனர்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …