வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்..!

Default Image

வங்கதேசத்தில், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக  15 மாதங்களுக்குப் பின்  வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். வங்கதேசம் சென்றுள்ள இவர், அங்கு தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் குடியரசு தலைவர் அப்துல் ஹமீது சந்திக்க உள்ளார். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேசத்தில் உள்ள டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுவீசி கலைத்தனர்.  இதில் 40 மாணவர்கள் காயமடைந்த நிலையில். அவர்களை டாக்கா  மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த போராட்டம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்