கொரோனா நிவாரணம் கேட்டு போராட்டம்.! 6 பேர் சுட்டுக்கொலை.!

Default Image

ஆப்கானிஸ்தானில் அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர்  உயிரிழப்பு.

ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்ற நாடுகளை போல நாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பித்ததால் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு தரப்பில் நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணத்தில் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி தலைநகர் பெரோஸ் கோவில் உள்ள கவர்னர் அலுவலகம் முன்பு பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியாக நடத்த போராட்டம்  திடீரென வன்முறை மாறியது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள்  சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் போலீசார்  போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்