பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…!!
- காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் தீவிரவாத இந்த தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டின் தூதரக அலுவலகம் முன் நூறுக்குமேற்பட்ட இந்திய வம்சாவளிகள் பாகிஸ்தானுக்கு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாகிஸ்தான் நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் , ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.