எஸ்டிஆரின் ‘டேய் மாமே’ பாடல் செய்த சாதனை.!
மகத் நடித்துள்ள இவன் தான் உத்தமன் என்ற படத்திலுள்ள டேய் மாமே என்ற சிலம்பரசன் பாடிய பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகராக திகழ்பவர் மகத். அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தற்போது ஹீரோவாக ‘இவன் தான் உத்தமன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் மாக்கபா ஆனந்த், மனோபாலா, சாரா வெங்கடேஷ், கே. எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Magven இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‘டேய் மாமே’ என்ற செம மாஸ்ஸான பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மணி அமுதவன் வரிகள் எழுத சிலம்பரசன் பாடியுள்ளார். தற்போது அந்த பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது
1M hearts for #Deimamae #IvanThanUthaman
Keep extending your love and support ????#Bharathanpictures @mahiram20 @iamvenkat6 #MAgVen @MusicThaman @MahatOfficial@iamyashikaanand @Saraaoffl@onlynikil @saregamasouth #NM #News23 pic.twitter.com/imTqjAXlkb— Actor Kayal Devaraj (@kayaldevaraj) July 20, 2020