மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.!

Default Image

மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன் தமிழக போலீசாரும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் காட்சிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் கடந்த 1-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன் படப்பிடிப்பு தளத்திலிருந்து இருந்து விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரணை சுமார் 20 மணி நேரம் நடத்தப்பட்டு நேற்று முன் தினம் நிறைவடைந்தது.

ஐயத்தைத்தொடர்ந்து வருமான வரித்துறை விசாரணை முடிந்து நேற்று மீண்டும் நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், 10 பேர் கொண்ட பாஜகவினர் என்எல்சி 2-வது சுரங்கத்தின் முன் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு நடிகர் விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்த லேசான தடியடி வரை நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை வழக்கம் போல் நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன் தமிழக போலீசாரும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்