தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்பு, குழுவினர் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்பு, குழுவினர் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிழலுக தாதா இப்ராஹிம், ஹபீஸ் சயீத், ஜாகூர் ரஹ்மான், முகமது அசார் உள்ளிட்டோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதனிடையே, இந்தியாவினால் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசிக்கிறார் என்று பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது.
அதாவது, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமான நிழல், தாதாவான தவூத் இப்ரஹீமிற்கு, தஞ்சம் அளிக்கவில்லை என பல ஆண்டு காலங்களாக மறுத்து வந்தது. மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கு பிறகு பாகிஸ்தானில் மறைந்து வாழும் தாவூத் இப்ரஹீம், பாகிஸ்தான் உதவியுடன் அங்கிருந்த படியே தடையின்றி கிரிமினல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்தார். ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. தற்போது பாகிஸ்தான் அவர் இருக்கும் வீட்டு விலாசத்தையும் வெளியிட்டுள்ளது.
கராச்சியில் உள்ள க்ளிஃப்டனில், சவுதி மசூதி அருகே ஒரு பங்களாவில் தாவூத் இப்ரஹீம் வசிக்கிறார் என்று கூறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவுவது தொடர்பாக கடுமையான நிதித் தடைகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தடைசெய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் மூலம் பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலம் வந்துள்ளது.
பாரிஸை தளமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) 2018 ஜூன் மாதத்தில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சேர்த்ததோடு, 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்றால் பாகிஸ்தான் மீது முழுமையாக தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. முழுமையாக தடை விதிக்கப்பட்டால் எந்த நாட்டில் இருந்து பாகிஸ்தான் நிதியுதவி பெற முடியாது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்பு, குழுவினர் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…