தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்புக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு – பாகிஸ்தான்

Default Image

தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்பு, குழுவினர் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்பு, குழுவினர் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிழலுக தாதா இப்ராஹிம், ஹபீஸ் சயீத், ஜாகூர் ரஹ்மான், முகமது அசார் உள்ளிட்டோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதனிடையே, இந்தியாவினால் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசிக்கிறார் என்று பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது.

அதாவது, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணமான நிழல், தாதாவான தவூத் இப்ரஹீமிற்கு, தஞ்சம் அளிக்கவில்லை என பல ஆண்டு காலங்களாக மறுத்து வந்தது.  மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கு பிறகு பாகிஸ்தானில் மறைந்து வாழும் தாவூத் இப்ரஹீம், பாகிஸ்தான் உதவியுடன் அங்கிருந்த படியே தடையின்றி கிரிமினல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்தார். ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. தற்போது பாகிஸ்தான் அவர் இருக்கும் வீட்டு விலாசத்தையும் வெளியிட்டுள்ளது.

கராச்சியில் உள்ள க்ளிஃப்டனில், சவுதி மசூதி அருகே ஒரு பங்களாவில் தாவூத் இப்ரஹீம் வசிக்கிறார் என்று கூறியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவுவது தொடர்பாக கடுமையான நிதித் தடைகளை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில், தடைசெய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் மூலம் பாகிஸ்தானின் ஒப்புதல் வாக்குமூலம் வந்துள்ளது.

பாரிஸை தளமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) 2018 ஜூன் மாதத்தில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சேர்த்ததோடு, 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்றால் பாகிஸ்தான் மீது முழுமையாக தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. முழுமையாக தடை விதிக்கப்பட்டால் எந்த நாட்டில் இருந்து பாகிஸ்தான் நிதியுதவி பெற முடியாது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்பு, குழுவினர் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்