வலிமை படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மாஸ் ஆன தீம் இருக்கும் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் 5 நாட்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திலிருந்து மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக படத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி “நாங்க வேற மாறி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், பாடலை குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறுகையில், ” வலிமை திரைப்படத்தின் பாடல் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது. நம்ம தலைக்கு எந்த பாடல் போட்டாலும் அது வெற்றிபெற்றுவிடும். விரைவில் அடுத்த பாடல் வெளியாகும். படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மாஸ் ஆன தீம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அஜித் தீனா, பில்லா, ஆரம்பம், மங்காத்தா ஆகிய படங்களுக்கு அட்டகாசமான தீம் மியூசிக் யுவன் கொடுத்துள்ளார். இதனால் வலிமை திரைப்படத்தின் தீம் மியூசிக்க்கு அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…