ஸ்ட்ராபெரியில் இவ்வளவு பயன்கள் இருக்கா… வாங்க உடனே சாப்பிடலாம்..!

ஸ்ட்ராபெரி, புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும் இப்பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து மக்களையும் கவர்ந்தது. இப்பழமானது, படர்ந்து வளரும் கொடி வகை தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் வெள்ளை நிறத்தில் பூக்கள் தோன்றுகின்றன. இப்பூக்களிலிருந்து கூம்பு வடிவ இளம் பச்சை நிறக் காய்கள் தோன்றுகின்றன.
இக்காய்கள் முதிர்ச்சி அடையும்பொது, அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும், உச்சியில் தொப்பி போன்ற அமைப்பை கொண்ட இலைகள் மற்றும் அதற்க்கு மேல் ஒரு காம்பு இருக்கும். மேலும், இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் இருக்கும்.
ஸ்ட்ராபெரியில் உள்ள சத்துக்கள்;
வைட்டமின்: எ, சி, இ, கே, பி2, பி3, பி5, பி6
கலோரிகள்: 32
நீர்: 91%
புரதம்: 0.7 கிராம்
கார்ப்ஸ்: 7.7 கிராம்
சர்க்கரை: 4.9 கிராம்
நார்: 2 கிராம்
கொழுப்பு: 0.3 கிராம்
மருத்துவ பண்புகள்;
கண்கள் பாதுகாப்பு: இதில் உள்ள விட்டமின் எ-யானது, சூரியனிடம் வரும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பிலிருந்து நமது கண்களில் உள்ள லென்ஸைப் பாதுகாக்கிறது. எனவே, ஸ்ட்ராபெரியை உண்டு நம் கண்களைப் பாதுகாக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க: நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, நம்மை நோய் தொற்று கிருமிகள், நுண்உயிர் தாக்குதல் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை நன்கு செயல்பட வைக்கிறது.
மறதி குறைய: இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பைத்தோ கெமிக்கல், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சி அடைய செய்கிறது. மேலும், ஞாபக மறதியை குறைக்கிறது.
இதைய நோயிலீருந்து பாதுகாப்பு:
இதில் காணப்படும் நார்சத்துகள், ஃபோலேட்டுகள், விட்டமின் சி, பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை இதய இரத்த நாளங்களில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. மேலும், இதில் உள்ள விட்டமின் பி-யின் தொகுப்பு, இதயத் தசைகளை வலுப்பெறச் செய்து, இதயத்தை நன்றாக செயல்பட வைக்கிறது.
இப்பழம் உண்பதன் மூலம் ஒரு சிலருக்கு தலைவலி, மூக்கு ஒழுகுதல், கண்ணெரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும், ஒவ்வாமை நோயுள்ளவர்கள், இந்த பழம் உண்பதை தவிர்க்க வேண்டும்.