அனைத்து விதமான சருமத்திற்கும் அழகு தரும் ஸ்ட்ராபெரி….!

Default Image

முக அழகுக்காக பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் பேக்குகளில் முல்தானி மெட்டி மற்றும் கடலை மாவு தான் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் மட்டும் அவ்வப்போது பழங்களை முக அழகுக்கு பயன்படுத்துகின்றனர். இயற்கையாக எதை பயன்படுத்தினால் முகத்தில் நிச்சயம் பலன் தரும்.

ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக் முக அழகுக்கு பெரிதும் உதவும் என உங்களுக்கு தெரியுமா? ஸ்ட்ராபெரியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தளர்ந்த சருமத்தை இறுக்கமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு இது பெரிதும் உதவுகிறது. இன்று வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும், முக பரு உள்ள சருமம் உள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது, அதில் உள்ள நன்மைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தளர்ந்த சருமம்

strawberry

பயன்கள்: தோல் சுருங்கிய சருமம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இவை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற பெரிதும் உதவும்.

உபயோகிக்கும் முறை : முதலில் ஸ்ட்ராபெரியை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு கரண்டி ஓட்ஸை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். 5 நிமிடம் கழித்து இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி கைகளால் நன்றாக மசாஜ் செய்யவும்.

அதன் பின் இதனை சாதாரண தண்ணீரால் கழுவி விடவும். இவை நமது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, தளர்வடைந்த சருமத்தை புதுப்பிக்க உதவும்.

பரு உள்ள சருமம்

பயன்கள்: ஸ்ட்ராபெரி ஃபேஸ் பேக் பருக்களை போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : ஸ்ட்ராபெரியை நன்றாக மசித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக தடவவும். அதன் பின் 10 நிமிடங்கள் கழிந்ததும் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவி விடவும். நிச்சயம் சருமத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கி விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்