சிம்பு-திரிஷா திருமணம் குறித்து எஸ்டிஆர் தரப்பிலிருந்து விளக்கம்.!

சிம்பு மற்றும் திரிஷா திருமணம் குறித்து வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று சிம்பு தரப்பிலிருந்து விளக் கமளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு அலை, விண்ணை தாண்டி வருவாயா ஆகிய படங்களில் திரிஷாவுடன் இணைந்து நடித்துள்ளார். இருவரும் நல்ல நட்புடன் பழகுபவர்கள். சமீபத்தில் கூட இருவரும் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்து பல விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றைய தினம் சிம்புவும், திரிஷாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக முன்னணி செய்தி ஊடகம் ஒன்று செய்திகள் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிம்பு தரப்பில் இருந்து கூறியதாவது, கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இது போன்ற தவறான செய்திகளை பரப்பி மகிழ்கின்றனர். சிம்பு மற்றும் திரிஷா திருமணம் என்று கூறியது முற்றிலும் பொய் என்று கூறியுள்ளனர். கடந்த 2017ல் திரிஷா கூறிய போது கூட, ஏழு ஆண்டுகளாக தனக்கு சிம்புவை தெரியும் என்றும், நான் காதலிக்க விரும்பும் நபர் அவர் இல்லை என்றும், அவர் தனக்கு நல்ல நண்பர் என்று தான் நம்புவதாகவும்,நண்பனை காதலிக்க முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சிம்பு திரிஷாவை திருமணம் செய்ய போவதாக வெளியான தகவல் வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025