STR பிறந்த நாள்… மாநாடு டீசர்… மரண வெயிட்டிங்கில் சிம்பு ரசிகர்கள்..!
சிம்புவின் பிறந்தநாளான இன்று மதியம் 2.34 மணிக்கு வெளியிட உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் படத்திலிருந்து வெளியான பர்ஸ்ட் லுக் , செக்கன்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிம்புவின் பிறந்தநாளான இன்று மதியம் 2.34 மணிக்கு வெளியிட உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.