திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!

Default Image

திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலிற்கு  நடிகர் சிம்பு சென்றுள்ளார். 

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை சுசீந்திரன் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் விருவிருப்பாக மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பிற்கு கலந்து கொள்வதற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார். அதேபோல் தற்போது திண்டுக்கல் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் திண்டுக்கல்லில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சென்று  சாமி கும்பிட்டுள்ளார்.

அவர் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சிம்பு அடுத்ததாக வருகின்ற டிசம்பர் மாதம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news today
TN Govt
Aadhav arjuna - TVK Leader Vijay - CTR Nirmal kumar
Aadhav Arjuna
President Murmu
mk stalin rn ravi
narendra modi