லேடி சூப்பர் ஸ்டார் நயனதாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை ஆர். ஜே. பாலாஜி பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனரான என். ஜே. சரவணனுடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் ஆர். ஜே. பாலாஜி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஊர்வசி, மௌலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும், வில்லனாக விசாரணை படத்தில் நடித்த அஜய் கோஷூம் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
பக்தி படமாக உருவாகும் இந்த படத்தின் கதையை ஆர். ஜே. பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த ஆர். ஜே. பாலாஜி தனது குடும்பத்தை காப்பாற்ற போராடி வருகிறார். அந்த குடும்பத்தில் மூக்குத்தி அம்மன் நுழையும் போது அங்கு என்னென்ன நடக்கும் என்பது தான் படத்தின் கதையாம். சமீபத்தில் கூட இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படாது என்றும், திரையரங்குகளில் தான் முதலில் வெளியிடப்படும் என்று ஆர். ஜே. பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்தாண்டு வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கண்டென்கள் எப்படி மக்களிடம் கொண்டு போய் சேரந்ததோ, அதே போன்று நயன்தாரா போன்று ஸ்டார் வேல்யூ கொண்ட ஒருத்தர் நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் கண்டென்டும் வேற லெவலுக்கு ரீச்சாகும் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…