பாலியல் உறவு வைத்திருந்த அதிபர் டிரம்ப்?ஆபாச நடிகையிடம் வெளியில் வாய் திறக்கக் கூடாது என ரகசிய ஒப்பந்தம்?
பாலியல் உறவு வைத்திருந்த ஆபாச நடிகை, தமக்கு வழங்கப்பட்ட தொகையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் திருப்பி அளிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டோர்மி டேனியல்ஸ் (Stormy Daniels) என்ற அந்தப் பெண், டிரம்புடன் பாலியல் ரீதியாக உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் வாய் திறக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டு அதற்காக அவருக்கு இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக அதிபரின் வழக்கறிஞரே கூறி இருந்தார்.
இதுதொடர்பாக தற்போது வழக்கு தொடர்ந்துள்ள அந்த நடிகை, அதிபர் உடனான உறவு பற்றி வெளிப்படையாகப் பேச விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அவர் சார்பாக தமக்கு அளிக்கப்பட்ட தொகையை திரும்ப வழங்க தயார் என்று டிரம்பின் வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.