ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை தாக்க வரும் புயல்கள்..!

Default Image

ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை புயல் தாக்கவுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது. மேலும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவை வரும் ஆகஸ்ட் 8 அன்று புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது சனிக்கிழமை மதியத்திலிருந்து ஞாயிற்று கிழமை மாலை வரை கிழக்கு கடற்கரையில் பலத்த காற்றுடன் உயர்ந்த காற்று, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒலிம்பிக் விளையாட்டின் நிறைவு விழாக்கள், மற்றும் போட்டிகள் ஆகஸ்ட் 8 அன்று நடைபெறவுள்ளது. டோக்கியோவில் தென்மேற்கில் சைக்கிள் டிராக் பந்தயம், வடக்கு திசையில் ஆடவருக்கான மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளது.

இது குறித்து அறிவித்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 கமிட்டி செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது, புயல் எத்திசையில் அடிக்க உள்ளது என்பதை நாங்கள் கவனித்து வருகின்றோம் அத்துடன் இது பற்றிய தகவலை வெளியிடுவது மூலமாக அதிகமான பாதிப்புகளை தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்