1 கோடி பேரின் வாழ்வை புரட்டி போட்ட “ஃப்ளோரன்ஸ் புயல்”..!!!தவிக்கும் அமெரிக்கா..!!
அமெரிக்காவில் ஃப்ளோரன்ஸ் புயலால் 5 பேர் பலியான நிலையில், ஒரு கோடி பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ஃப்ளோரன்ஸ் புயல், தெற்கு கரோலினா, விர்ஜினியா, ஜார்ஜியா, வாஷிங்டன், மேரிலேண்ட் மாகாணங்களை தாக்கி விட்டு, வடக்கு கரோலினாவில் கரையைக் கடந்தது. இந்த மாகாணங்களில் கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து முடங்கியுள்ளது.
ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து மின் வினியோகம் தடைபட்டுள்ளது. வடக்கு கரோலினாவில் வீட்டின் மீது மரம் விழுந்து தாயும், குழந்தையும் பலியாகினர். சீரமைப்புப் பணிகள் குறித்து அந்தந்த மாகாண நிர்வாகங்களிடம் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் அடுத்த வாரம் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU