சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல் நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், அந்த நான்கு மாவட்டங்களில் தற்போது மீண்டும் பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே தடைபட்டு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல் நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது. இதனை ஃபெப்சி நிறுவன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பொது முடக்கத்தை மீண்டும் அறிவித்துள்ளதால் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய மூன்று மாத பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் சீரியல் பார்க்க எண்ணிய சின்னத்திரை ரசிகர்கள் தற்போது மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…