ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி உதவி நிறுத்தம்…!
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி உதவியை உலக வங்கி நிறுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்பதாக மீண்டும் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்வதற்காக பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு வீரர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்த தனது நிதியை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.