டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் விளம்பர படங்களை நிறுத்த கோரிக்கை ?

நாளை நியூயார்க்கின் சின்னமான டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள சில முக்கிய விளம்பர பலகைகளில் ராமரின் படங்கள் காட்சிப்படுத்தப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமர் கோயிலுக்கு அடிக்கல்நாட்ட உள்ளார்.இதனிடையே அமெரிக்க இந்திய பொது விவகாரக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் செஹானி கூறுகையில்,
நாளை அயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணம்.இதனை கொண்டாடுவதற்காக நியூயார்க்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற சொற்களின் படங்கள், ராமரின் உருவப்படங்கள் பல விளம்பர பலகைகளில் காண்பிக்கப்படும். இந்த விளம்பர பலகைகள், உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான டைம்ஸ் சதுக்கத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தார். இதனிடையே பிரதான விளம்பர பலகைகளை நிர்வகிக்கும் ஒரு விளம்பர நிறுவனம், அமெரிக்காவில் ஒரு முஸ்லீம் குழு டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் படங்களை காண்பிக்க வேண்டாம் என்று நிறுவனத்திடம் கேட்டதை அடுத்து விளம்பரத்தை நிறுத்தியாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025