வயிற்றில் ரத்தக்கசிவு.! வெளிநாடு செல்ல அனுமதி பெற்ற டி ராஜேந்தர்.!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் டி ராஜேந்தர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் லேசான ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், டி ராஜேந்தர் மருத்துவ மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளார். அதாவது, அரசாங்கத்தால் தனது விசாவை பெற்றுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் சிங்கப்பூர் செல்வார் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது தந்தையுடன் இருக்க தனது படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், அவரும் தனது தந்தையுடன் சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சைக்கு அவருடன் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டி ராஜேந்தருக்கு சிங்கப்பூரில் பெரிய அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது, மேலும் அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது.