பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 250 புள்ளிகள் குறைந்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 250 புள்ளிகள் குறைந்து 60,431 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,770 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,652 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 250 புள்ளிகள் அல்லது 0.41% என குறைந்து 60,431 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 85.60 புள்ளிகள் அல்லது 0.48% குறைந்து 17,770 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டைட்டன் கம்பெனி, லார்சன் & டூப்ரோ, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி லிமிடெட், வீட்டு வசதி மேம்பாட்டு நிதி நிறுவனம் (Housing Development Finance) ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ லிமிடெட், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டைட்டன் கம்பெனி, லார்சன் & டூப்ரோ, என்டிபிசி லிமிடெட், பஜாஜ் ஆட்டோ, ஐச்சர் மோட்டார்ஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், யுபிஎல் லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் சோன் (Special Economic Zone), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.