ஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் கூட்டணி மூன்றாம் இடம் பிடித்தது!
நேற்று நடந்த போட்டியில் இலங்கை ,ஆஸ்திரேலிய அணி மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை பறி கொடுத்து 334 ரன்கள் குவித்தனர்.
பின்னர் அடுத்ததாக களமிறங்கிய இலங்கை அணி 45.5 ஓவர் முடிவில் 247 ரன்கள் சேர்த்து இலங்கை அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் 153 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.மேலும் இப்போட்டியில் மீண்டும் ஒரு சாதனையையும் புரிந்தார்.
இதன் மூலம் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களில் 3 -வது விக்கெட்க்கு கூட்டணி சேர்ந்து அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் மூன்றாம் இடம் பிடித்து உள்ளனர்.
நேற்றைய போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் , ஆரோன் பிஞ்ச் இவர்களின் கூட்டணியில் மட்டுமே 173 ரன்கள் குவித்தனர்.
234* – Martyn/Ponting v IND, 2003
204 – M Waugh/S Waugh v KEN, 1996
173 – Finch/Smith v SL, 2019
161 – Clarke/Ponting v SA, 2007
134 – Clarke/Smith v SL, 2015