சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்க்கு முழு உருவ சிலையை ரசிகர்கள் நிறுவியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என உலகம் முழுக்க பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் வெளியாகும் நாள் திரையரங்குகளில் திருவிழா போல இருக்கும். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது.
தளபதி விஜய் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கம் என மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜயின் பிறந்த நாள், விஜயின் பட வெளியீட்டு நாள், போன்ற நாட்களுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள அவரது ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், தளபதி விஜயின் சிலையை சென்னையை அடுத்த பனையூரில் நடிகர் விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் நிறுவியுள்ளனர். தற்போது விஜயின் சிலை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…