இன்றே இனிதே ஆரம்பம்.! நண்பர்களின் தயாரிப்பில் விஷால்-32 சூப்பர் அப்டேட்.!
விஷால் நடிக்கும் அவரின் 32வது திரைப் படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
நடிகர் விஷால் தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் விஷால் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 32-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அசோக் என்பவரது இயக்குகிறார். நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
சமர் படத்தை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு விஷாளுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. இதனையடித்து தற்போது படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான புகைபடங்களை வைரலாகி வருகிறது.