உலகக்கோப்பையில் பந்து வீச்சில் முதலிடத்தில் உள்ள ஸ்டார்க்!

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளர் ஸ்டார்க் 9.4 ஓவரை வீசி 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டை பறித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தார்.
இந்நிலையில் ஸ்டார்க் கடந்த உலகக்கோப்பையில் இருந்து இதுவரை விளையாடிய போட்டிகள் வரை 45 விக்கெட்டை பறித்து உள்ளார்.மேலும் கடந்த உலகக்கோப்பையில் இருந்து அதிக விக்கெட்டை பறித்த வீரர்களில் ஸ்டார்க் 45 விக்கெட்டை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
45 – ஸ்டார்க்
35 – போல்ட்
30 – ஷமி
26 – வஹாப்
25 – தாஹிர்
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025