ஆர்டர் செய்த காஃபி கப்பில் “ISIS” என எழுதி கொடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்.!
அமெரிக்காவின் மினசோட்டாவின் செயின்ட் பால் நகரில் உள்ள ஒரு ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடையில் ஜூலை 1 -ம் தேதி ஓரு முஸ்லிம் பெண் ஆர்டர் செய்த காபியில் தனது பெயருக்குப் பதிலாக ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என எழுதப்பட்டதை பார்த்து அப்பெண் அதிர்ச்சி அடைத்தார்.
சம்பவம் நடந்த நாளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக முகமூடி அணிந்திருந்த ஆயிஷா, காபி ஒன்றை ஆர்டரை செய்யும் போது தனது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறினார். ஸ்டார்பக்ஸ் ஊழியர் தன் பெயரைக் கேட்டபோது, நான் மெதுவாக என்பெயரை பல முறை திரும்பத் திரும்பச் சொன்னேன். அதனால் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று ஆயிஷா கூறினார்.
நான் ஆர்டர் செய்த காபியை பார்த்தபோது நான் அதில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என எழுதப்பட்டதை பார்த்து இழிவுபடுத்தப்பட்டேன், மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். இது உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் நற்பெயரை சிதைக்கும் ஒரு சொல் என ஆயிஷா கூறினார். பின்னர், ஆயிஷா மேலாளரைக்இது குறித்து கேட்டார், அதற்கு அவர் இந்த சம்பவம் தவறாக நடந்துவிட்டது என கூறினர். நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்தோம், இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல, ஆனால் ஒரு துரதிர்ஷ்டவசமான தவறு, மேலும், இது போன்று மீண்டும் ஏற்படாது. நாங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஆயிஷாவிற்கு ஒரு புதிய காபி கொடுப்பட்டது. மேலும், 25 அமெரிக்க டாலர் பரிசு அட்டையும் ஸ்டார்பக்ஸ் வழங்கியது.