ஸ்டார் பழம் அல்லது நட்சத்திரப் பழம் என அழைக்கப்படக் கூடிய இயற்கையின் வரப்பிரசாதம் ஆகிய நட்சத்திர பழம் மூல நோய்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவம் சார்ந்த நன்மைகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளது அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நட்சத்திர பழம் அல்லது ஸ்டார் பழம் என அழைக்கப்படக் கூடிய இந்தப் பழத்தில் அதிக அளவில் தாது உப்புக்கள் காணப்படுகிறது. இந்த பழத்தை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது மிகவும் நல்லதாம். காரணம் என்னவென்றால் இந்த பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மை நிறைந்து காணப்படுவது தான். இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதுடன், உடலை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் இந்த பழம் மூல நோய்க்கு எதிராக சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறதாம். மூல நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் அதன் தாக்கம் குறைந்து விரைவில் குணமடையலாம். மேலும் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுவதுடன், முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் வராமல் தடுக்கிறது. மேலும் பளபளப்பான அழகிய முகத்தையும் கொடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான தாது உப்புக்கள் காரணமாக நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்குவதுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை நிச்சயம் எடுத்து கொள்ளலாம்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…