மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க அழைப்பு!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் நடைபெறும் விருந்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இரவு விருந்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.