ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் கட்…..!!!!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள் யாராவது ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. தேர்தல் சமயத்தில் விடுப்பு எடுத்தாலோ, ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டாலோ சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.