"பப்ஜி" கேமிற்கு இணையாக வருகிறது ஸ்டேடியா.!
கூகுள் ஸ்டேடியா கேமிங் என்பது கிளவுட் கேமிங் சேவையாகும். . அந்த கேம்களை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று அவசியமும் இல்லை. உங்கள் குறைந்த தொழில்நுட்பம் கொண்ட சாதாரணக் குறைந்த ரேம் கொண்ட கணினிகளிலும் கூட க்ரோம் உலவியில் உயர்தொழில்நுட்ப இந்த ஸ்டேடியா கேமிங்கை விளையாடலாம். மேலும் மொபைல், டேப்லட், டிவிக்களிலும் நீங்கள் விளையாடலாம்.
இந்நிலையில் நவம்பர் 19, செவ்வாய்கிழமை 14 நாடுகளில் ஸ்ட்ரீமிங் மற்றும் விளையாடுவதற்கான ஸ்டேடியா கேமை அறிமுகப்படுத்துவதாக தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இந்த ஸ்டேடியா கேம் பப்ஜி கேமிற்கு இணையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
ஸ்டேடியா வழங்கும் இந்த கேம் உள்ளடகத்தை உருவாக்கும் அல்லது முறிக்கும் என்று வீடியோ கேம் ஆய்வாளர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த கேமிங் விளையாட உங்களிடம் குறைந்தபட்சம் 15 எம்பிபிஎஸ் வேக இணைய வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.