ஹிந்தி நடிகைகளுக்கான வாய்ப்பை தட்டிப்பறித்த ஸ்ருதிஹாசன்!

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் இந்தி நடிகைகளை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் அவர்களின் இயக்கத்தில் சலார் எனும் பிரம்மாண்ட திரைப்படம் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்திற்கான பூஜை கடந்த வாரம் தான் நடைபெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரக்கூடிய தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க கூடிய பிரபாஸ் சலார் படத்திலும் அட்டகாசமான கதாநாயகன் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் இந்தி திரையுலகை சேர்ந்த நடிகைகைகள் ஒருவரை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரிடம் பேசப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஹிந்தி நடிகைகளுக்கான வாய்ப்பை தமிழ் நடிகை ஸ்ருதிஹாசன் பெற்றுள்ளார்.
சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் வெளியாகிய கிராக் எனும் ஸ்ருதிஹாசனின் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, சலார் படத்திலும் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கலாம் என தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில்இவர் நடித்தால் இதுதான் பிரபாஸுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். ஏற்கனவே தெலுங்கு திரை உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்ருதிகாசன், இந்த படத்தின் மூலம் மேலும் தெலுங்கு திரை உலகில் ஆழமாக கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025