இலங்கையில் மீண்டும் கலவரம்! மீண்டும் பதற்றம்! மீண்டும் ஊரடங்கு உத்தரவு! 100 பேர் கைது!

Default Image

இலங்கையில், ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியத்தில், 258 பேர் உயிரிழந்தனர். 5000 பேர் காயம் அடைந்தனர்.இந்த சம்பவத்துக்கு பின், இலங்கையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வந்தாலும், சமூக வலைத்தளங்களில், பொய்யான செய்திகள் பரவி வந்தன. இதையடுத்து, இலங்கையின் வடமேற்கு பகுதியில் கலவரம் மூண்டது. இதன் காரணமாக முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனால் இலங்கையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சில முக்கிய நகரங்களில், சில நாட்களுக்கு முன்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மறுநாள் காலை, உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், மீண்டும், இருதரப்பினரிடையே மோதல் துவங்கி உள்ள காரணத்தால். கொட்டாரமல்லா என்கிற இடத்தில அமீர் என்பவர், கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.போலீசார் கலவரக்காரர்களை தேடி, தாக்குதல் நடத்திய, 100 நபர்களை கைது செய்துள்ளனர். இதனால் மீண்டும் நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்