மூக்கை நுழைக்கும் அமெரிக்கா…….வாயை மூடும் இலங்கை……கண்ணை மூடும் இந்தியா….!!!உச்சக்கட்ட குழப்பத்தில் குமுறும் இலங்கை…!!

Default Image

உச்சக்கட்ட குழப்பத்தில் இலங்கை தத்தளித்து வருகிறது.நாட்டில் குழப்பத்தை உருவாக்கியதற்கு கடும் கண்டனங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்நிலையில் திடீரென்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை முடக்கினார் அதிபர் சிறிசேனே இந்த முடக்கம் பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக இந்த முடக்கம் என்றும் இதனிடையே முடக்கப்பட்ட நாடாளுமன்றம் வரும் 16ம் தேதி வரை முடக்கி வைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Image result for SRI LANKA POLITICS
ஒரே நாளில் ரணில் விக்ரமசிங்கே பதவி பறிக்கப்பட்டது இந்த பதவி பறிப்புக்கும், அந்நாட்டின் நாடாளுமன்ற முடக்கத்திற்கும் சபாநாயகர் ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே அதிரடியாக அறிவித்த ரணில் பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவும், பெரும்பான்மை பலம் தனக்கு இருப்பதாகவும் கூறி வந்த நிலையில் தான் நாடாளுமன்ற முடக்கம் மற்றும் பிரதமர் அதிபர் இடையே அதிகார போட்டியாக உருவெடுத்த நிலையில் இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
Related image
இந்நிலையில் களத்தில் இறங்கிய மக்கள் இலங்கையில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சேவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டன பேரணிகளை நடத்தினர்.
Image result for SRI LANKA POLITICS AMERICA
இந்த பேரணியில்  ஐக்கிய தேசிய கட்சியினர் பெருமளவு கலந்து கொண்டனர். பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில்  ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக அந்நாட்டில் உள்ள அமெரிக்க துாதரகம் மூடப்பட்டது. அமெரிக்க துாதரகம் மூடப்பட்டதை அறிந்த அதிபர் சிறிசேனவுக்கும், ராஜபக்சேவுக்கும் பெரும் அதிர்ச்சியும் பீதியும் ஏற்பட்டது.ரணிலுக்கு அமெரிக்காவின் ஆதரவு அளிப்பதை இதன்மூலம் தெரியவருகிறது.
Related image
இந்நிலையில் இந்தியா இலங்கை அரசியல் விவகாரங்களை உற்று நோக்கி வருகிறது என்று அண்மையில் தெரிவித்தது.ஆனால் இது பற்றி எதுவும் தெரியாது போல் நடந்து கொள்வதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா இலங்கை விவகாரத்தில் மறைமுகமாக தனது அதிகாரத்தை செலுத்திகிறது என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்