இனப்படுகொலை தமிழர்களை கொன்று குவித்த கொடூர ராணுவ தளபதி அதிரடி கைது…!!காலம் கடந்த நடவடிக்கை…….கொந்தளிக்கும் மக்கள்..!!!

Default Image

உலகையை ஆத்திரமடைந்து திரும்பி பார்க்க வைத்த பெருமை இலங்கையை சாரும்.அங்கு நடந்த உள்நாட்டு போரில் அப்பாவி தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் சிறார்கள்,சிறுமிகள் என்று பாரபட்சம் பார்க்கமால் குழந்தைகள்,இளம்பெண்கள்,என அனைவரையும் எப்படி கொடூரமாக கொள்ளமுடியாதோ அப்படி கொடூரமாக கற்பழித்து,கண்களை தோண்டி,தூக்கி எரியும் பணடாமாக தூக்கி எரிந்து கொலை செய்த கொடுமைகள் எல்லாம் நெஞ்சை பதையவைத்தது.

Image result for இலங்கை தமிழர்கள் படுகொலை

இந்த கொடூரத்திற்கு உறுதுணையாக நின்ற கொடூர மனம் படைத்த அந்நாட்டின் ராணுவ தளபதியின் மேற்பார்வையில் நடந்தது தான் உச்சத்தின் கொடுமை.2009 நடந்த போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு என்ற பத்திரிகை கூறுகியது. ஐநா வெளியிட்ட அறிக்கையில் சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுயது.எத்தனை அறிக்கைகள் வெளியிட்ட போதிலும் அறிக்கை முழுமையானதாக இல்லை என்று பகீரங்கமாக Amnesty Inernational சுட்டிக்காட்டி மூக்கை உடைத்தது.மேலும் முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரியது . 

Image result for இலங்கை தமிழர்கள் படுகொலை

ஆனால்  100000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவித்தது.உலக வரலாற்றில் நடைபெற்ற மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவாகும் ஒரு இனத்தையே அழிக்க ஒன்று கூடிய கொடூர தாக்குதல் வேட்டை என்றே கூற வேண்டும்.இனபடுகொலையின் உச்சமாக இலங்கையில் போர் நடந்த   வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி  வவுனியாவுக்கு  தஞ்சம் அடைந்த பெண்கள் கருவுற்றிருந்து இருந்த தாய்மார்களுக்கு  கட்டாய கருக்கலைப்பு வேண்டும்.

Related image

என்றும் கருக்களைக்  கலைத்துவிடுங்கள் என்று வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு உயரதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது. போரினால் அவலப்பட்டு  வவுனியா வரும் தமிழ் கர்ப்பிணி பெண்களை கட்டாயக் கருக்கலைப்பு செய்து கொண்டால் தான் எங்களின்  பராமரிப்பு கிடைக்கும் என்று ஏமாற்றியும், இதில் நடந்த கொடுமையாக   சிங்களம்மொழி  தெரியாதத் அப்பாவி தமிழர்களிடம்  சிங்கள  மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து போட வைத்து கருக்கலைப்பு செய்தனர் கொடூரர்கள்.

Image result for இனப்படுகொலை ராஜபக்சே

இது இலங்கையில் தமிழர்களும்,அவர்களின்சந்ததியினர்களும் இலங்கை மற்றும் இலங்கை தீவிகளில் இருக்கவே கூடாது என்று வெறித்தனத்தின் உச்சமாக திட்டம்மிட்டு செய்த நடவடிக்கையாகும்.

Image result for இனப்படுகொலை

ஒரு இனத்தைக் கருவிலேயே அழித்து ஒழிக்க வேண்டும் ஒடுக்க வேண்டும் இலங்கையின் கொடூர முகத்தை காட்டியது.பல பெண்கள் நிர்வாணமாக கற்பழிக்கப்பட்டு பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமாக கொலை செய்தனர்.இப்பாடி அங்கு நடந்த இனப்படுகொலை செய்து விட்டு உலக நாடுகளின் கண்ணில் மண்ணை போட்டுவிட்டு வளர்ந்து கொண்டிருக்கும் இலங்கை வேண்டுமானல் உலக நாடுகளிலிருந்தும் ஐநாவிடமிருந்தும் தப்பியிருக்காலாம்

Image result for இலங்கை தமிழர்கள் படுகொலை

நியாத்திடம் என்று தப்பிக்க முடியாது காலம் கடந்தாலும் நியாயம் என்றோ ஒரு நாள் வெல்லும் அன்று இலங்கையின் முகத்திரை கிழிக்கப்படும் என்பதை இலங்கை மறக்க வேண்டாம் என்று காலம் அதற்கு எச்சரிக்கையை அறை கூவலாக விடுகிறது.இந்த இனப்படுகொலை எல்லாம் தற்போது இலங்கையின் பிரதமாரக பதவியேற்று நாட்டையே குழப்பி கொண்டிடுக்கும் மஹிந்த ராஜபாக்சே ஆட்சியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.இந்த கொடூரங்களை இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி ரவீந்திரா விஜயகுணரத்னே வைக் கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related image

இலங்கையின் இறுதிப் போரின் போது 11 தமிழர்களை கடத்திச் அவர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்த கடற்படை அதிகாரி சந்தன பிரசாத்திற்கு துணை நின்றதாக தொடரப்பட்ட இந்த வழக்கில் இலங்கை கொழும்பு கோட்டை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related image

ஆனால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட 11 பேரின் உடல்கள் மீட்கப்படாத போதிலும் சந்தன பிரசாத் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த கொடூரனுக்கு துணையாக இருந்த ரவீந்திராவை நவம்பர் 9ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்று உத்தவிட்ட நீதிமன்றம் கைது செய்ய தவறினால் இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி மீது கடுமையாக  நடவடிக்கை எடுக்கபடும் என்றும் நீதிபதி எச்சரிக்கையுடன் உத்தரவிட்டுள்ளார்.இது காலம் கடந்த நடவடிக்கை என்று சமூக ஆர்வலர்களும்,மக்களும் கோபத்தோடு தெரிவிக்கின்றனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்