மூன்று ஹீரோயின்களுடன் இரண்டு கதாபாத்திரத்தில் களமிறங்கிய ஸ்ரீகாந்த் !
நடிகர் ஸ்ரீகாந்த் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் .இவர் கோலிவுட் சினிமாவில் “ரோஜா கூட்டம்’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் அடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது பார்த்தீபன் இயக்கத்தில் “மிருகா” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் பற்றி ஸ்ரீ காந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், “இந்த படத்தில் எனக்கு இரண்டு கதாபாத்திரம் என்றும் நல்லவன் .கெட்டவன் என்ற கதாபாத்திரங்களும் என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் என்னை புது விதமான பரிமாணத்தில் பார்க்கலாம் என்றும் என்னுடைய உடல் அமைப்பு .மொழி ,பேசுவிதம் அனைத்துமே புதிதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் என்னுடன் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ராய் லஷ்மி ,2 அறிமுக நாயகிகள் என மூன்று பேர் நடிக்கிறார்கள்.மூன்று பெரும் நல்ல திறமை சாலிகள்.மூன்று பெரும் சரி சமமான திறமை கொண்டவர்கள் ” என்றும் அவர் கூறியுள்ளார்.புலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது.