இலங்கையின் அதிபர் தேர்தல் வருகின்ற ஜனவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு…!!
இலங்கையின் மாகாண சபை தேர்தல் மற்றும் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வருகின்ற 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகின்றது. இதைத்தொடர்ந்து இலங்கையின் சுதந்திர கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதிபர் மைத்ரிபால சிறிசேனா இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இலங்கையின் அதிபர் பதவிக்காலம் முடிவடைவதற்குள் அதிபர் தேர்தலை நடத்த சிறிசேனா திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு சுதந்திர கட்சியினரை தயார் செய்யும் வகையிலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 2019 ஜனவரி மாதத்தில் அதிபர் தேர்தல் அறிவிப்பை சிறிசேனா வெளியிடலாம் என்றும் தகவல் வந்துள்ளது.