இலங்கையில் பொருளாதார நெருக்கடி இன்னும் இரு வருடங்களுக்கு நீடிக்கும் – நிதி அமைச்சர் அலி சப்ரி!

Default Image

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிக அளவில் உயர்ந்து காணப்படுவதுடன், மின் தடையும் இலங்கையில் பல மணி நேரங்கள் காணப்படுகிறது. கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கையில் சுதந்திரம் கிடைத்த தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தான் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுபின்பதாக .

எனவே இலங்கையில் உள்ள அரசாங்கத்தை ராஜினாமா செய்யக்கோரி இலங்கை பொது மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர் அலி சப்ரி அவர்கள் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும், நிலைமையின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும், இந்த பொருளாதார நெருக்கடியை உடனடியாக தீர்க்க முடியாது. ஆனால், இனி நாம் எடுக்கும் முடிவுகள் தான் இந்த பிரச்சனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்கும். கிட்டத்தட்ட இந்த பொருளாதார நெருக்கடி குறைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்