போராட்டக்காரர்கள் குவிந்ததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடியுள்ளார் என்று தகவல்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால்,போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் குவிந்துள்ளனர்.கூட்டத்தை கலைக்க இலங்கை காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும்,கண்ணீர் புகைக்குண்டு வீசியும் வருகின்றனர்.எனினும்,போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் உள்நுழைந்துள்ளதாகவும்,இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே,அரசு மாளிகையில் இருந்து தப்பியோடி ராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உளவுத்துறை எச்சரித்ததையடுத்து இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே,நேற்று இரவே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…