இலங்கை அதிபர் தேர்தல்..! வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு..!
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் . இலங்கையில் மொத்தம் 12,845 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவுகள் நடைபெற்று வருகிறது.
வாக்கு பதிவு நடைபெற்றுவரும் நிலையில் வடமேற்கு பகுதியில் வாக்காளர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.இஸ்லாமியர்கள் வாக்களிக்க சென்ற பேருந்தை நோக்கி மர்ம நபர்கள் தூப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த துப்பாக்கி சூடு சம்பவம் யார் நடத்தியது என இன்னும் கண்டுபிடிக்கவில்லை.