தொடர் குண்டு வெடிப்பு !மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு
போதிய கவனம் செலுத்தாதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு.
இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 310-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உளவுத்துறை எச்சரிக்கை மீது போதிய கவனம் செலுத்தாதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு.இது தொடர்பாக அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர்வெளியிட்டஅறிவிப்பில்,அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் குடுப்பதினாரிடம் வருத்தத்தையும் ,மன்னிப்பையும் தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.