இலங்கை நிதி அமைச்சர் நள்ளிரவில் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி… பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு…
மஹிந்த ராஜபக்சே உறவினரும், முன்னாள் நிதியமைச்சருமான பாசில் ராஜபக்சே நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்பிச்செல்ல வந்ததாக கூறப்படுகிறது.
இலங்கையில் நாளுக்கு நாள் மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயர் பதவியில் உள்ள அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்யும் நிலைமைக்கு வந்துள்ளனர்.
இதனால் எதிர்க்கட்சிகள் கூடி அனைத்து கட்சி ஆட்சி என்கிற நடைமுறையை அமல்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். ஏற்கனவே பல்வேறு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
இதில் மஹிந்த ராஜபக்சே உறவினரும், முன்னாள் நிதியமைச்சருமான பாசில் ராஜபக்சே நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கொழும்பு விமான நிலையத்திற்கு வந்துள்ளாராரம்.
அங்கிருந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடிவு எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு இருந்த விமான நிலைய அதிகாரிகள் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அதிகாலை 3.30 மணி வரை விமான நிலையத்தில் தான் பாசில் ராஜபக்சே இருந்துள்ளதாக அங்குள்ள சிசிடிவியில் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதன் பிறகு அங்குஅவர் இருப்பது பொதுமக்களுக்கு தெரியவரவே சர்ச்சையாகி, அதன் பின்னர் பாசில் ராஜபக்சே மீண்டும் ஊருக்குள் வந்துவிட்டாராம்.