இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்! பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு!
இலங்கை, கொழும்பு தலைநகரில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளிலும் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்து அந்த நாட்டிற்கு சுற்றுலா வந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.