இலங்கை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு ஈபிள் டவர் விளக்குகளை அணைத்து அஞ்சலி
இலங்கையில் நேற்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்கள் , குடியிருப்பு பகுதி என 8 இடங்களில் குண்டு வெடித்ததில் 290 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்தனர்.குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தற்கொலை படையை சேர்ந்தவர்கள்.
குண்டு வெடிப்பு சம்பவத்தினால் பாதுகாப்புக்காக இலங்கை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.