இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் – பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு
இலங்கையில், நேற்று மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளது.
முதலில் 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதனை தொடர்ந்து மேலும் சில இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. நேற்று இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 250 பேர் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிகமான வெளிநாட்டவர்களும் பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.